கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
#JustIN: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர், தமச்சான் கிராமத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு 2 வயது குழந்தை இருக்கிறது. இந்த குழந்தையின் பெற்றோர் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
விவசாய நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணத்தில், 2 வயது குழந்தை தவறி விழுந்துள்ளது. குழந்தை 20 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த நிலையில், பெற்றோர்கள் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், 19 மணிநேரம் போராடியும் பலனின்றி குழந்தையின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.