பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
முப்படை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து.! என்ன காரணம்.?
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த மாதம் 8-ந்தேதி முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் இறந்துவிட்ட நிலையில், இந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த விமானி வருண் சிங், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
இந்தநிலையில் அங்கு நடந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து விமானப்படை அதிகாரி மானவேந்திர சிங் தலைமையிலான விசாரணைக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்கு மோசமான வானிலையே முக்கிய காரணம் என்றும், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் எந்தவித தொழில்நுட்ப குறைபாடும் இல்லை என ஏர் மார்ஷல் மன்வேந்திரா சிங் தலைமையிலான குழு விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளன. இந்த விபத்து தொடர்பான ஆய்வறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியகி உள்ளது.