ஹோட்டல் அருகில் பிச்சை எடுத்த 3 பேரை அடித்துக் கொன்ற உரிமையாளர்: பதறவைக்கும் சம்பவம்..!



hotel-owner-killed-3-beggars-in-maharashtra

உணவகத்தின் அருகில் அமர்ந்து பிச்சை எடுத்த மூன்று பேரை அடித்து கொன்ற உணவக உரிமையாளரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் சஸ்வாத்பகுதியில் நிலேஷ் ஜெய்வந்த் என்பவர் உணவகம் ஒன்று வருகிறார்.   இந்த உணவகத்திற்கு அருகில் மூன்று பிச்சைக்காரர்கள் தினமும் அங்கு  அமர்ந்து பிச்சை பெற்று அங்கேயே படுத்து உறங்கி வந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் மீது நிலேஷ் ஜெய்வந்த் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த மே 23 ஆம் தேதி அன்று அந்த மூன்று பிச்சைக்காரர்களையும்   கடுமையாக அடித்து உதைத்திருக்கிறார் நிலேஷ் ஜெய்வந்த். அப்படியும் ஆத்திரம் தீராத அந்த உணவக  முதலாளி நிலேஷ் ஜெய்வந்த், கடையில் இருந்த கொதிக்கும் வெந்நீரை எடுத்து வந்து அந்த மூன்று பிச்சைக்காரர்கள் மீதும் ஊற்றியிருக்கிறார்.

இதை பார்த்த பொது மக்கள் படுகாயமடைந்து அலறி துடித்துக்கொண்டிருந்த அவர்களை சிலர் மருத்துவமனையில் கொண்டு போய் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிச்சைக்காரர்கள் மூன்று  பேரும் உயிரிழந்தனர்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் கூட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் இருந்திருக்கிறார்கள். 

அந்த உணவக உரிமையாளர் நிலேஷ், அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் உறவினர் என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யக்கூடாது என்று காவல்துறையினருக்கு  அழுத்தம் கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்ததுள்ளது .

இதனால் அப்பகுதியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், கடந்த மே 30ஆம் தேதியன்று ஹோட்டல் உரிமையாளர் நிலேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது . அதன் பின்னர் தலைமறைவாகி விட்ட நிலேஷை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.