#Breaking: கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை; மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்.!
தென்மேற்கு பருவமழை இந்தியாவையே புரட்டிப்போட்டு அமைதியான நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழைக்கான தருணம் வந்துவிட்டது.
கேரளாவில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் மாஹே பகுதியிலும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டங்களில் மிககனமழை பெய்யும்.
இதனால் மேற்கூறிய மாவட்டங்களில் இன்று மக்கள் கவனமாக இருக்குமாறும், காற்று 30 - 40 கி.மீ வேகம் வரை வீசக்கூடும் என்பதால் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காசர்கோடு, கண்ணூர், மலப்புரம், பாலக்காடு, திருசூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களில் மழையினால் வெள்ளத்திற்கு வாய்ப்புள்ளது என்றும், நீர்நிலைகளுக்கு அருகேயுள்ள மக்கள் கவனமுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.