14 வயது சிறுமி பலாத்காரம்; வளர்ப்பு தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை.!



 in Punjab Ludhiana father Prisoned 20 Years raping Daughter

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா மாவட்டத்தில், 14 வயதுடைய சிறுமி தனது வளர்ப்பு தந்தையின் பராமரிப்பில் வசித்து வந்துள்ளார். சிறுமி தனிமையில் இருப்பதை பயன்படுத்திக் கொண்ட வளர்ப்பு தந்தை, சொந்த மகள் என்றும் பாராது அவரை பலாத்காரம் செய்துள்ளார். 

மகள் பலாத்காரம்

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுமியின் வளர்ப்பு தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இதுதொடர்பான வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, குற்றவாளிக்கு எதிரான அனைத்து விசாரணையும் நிறைவு பெற்றுள்ளது. 

இதையும் படிங்க: வீட்டில் தனியாக இருந்த 4 வயது சிறுமி பலாத்காரம்; புத்தாண்டு அன்று கொடூரம்..!

Rape

20 ஆண்டுகள் சிறை தண்டனை

நேற்று சிறுமியின் வளர்ப்புத்தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், தாய் இருந்தபோது மகளை மிரட்டி கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தி, வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்தது விசாரணையில் அதிர்ச்சி தரும் வகையில் அம்பலமானது.

இதையும் படிங்க: தேர்வெழுதி வீட்டிற்கு திரும்பிய 7 வயது சிறுமி பலாத்காரம்; இளைஞர் அதிர்ச்சி செயல்.!