5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 14 வயது சிறுவனின் அதிர்ச்சி செயல்.!



  in Andhra Pradesh 5 Year Old Child Raped by 14 Year Old Minor 

வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனகாப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், 5 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகிறார். 

இவர் நேற்று தனது வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், அங்கு வருகைதந்த 14 வயது சிறுவன், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: 14 வயது சிறுமி பலாத்காரம்; வளர்ப்பு தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை.!

Rape

சிறுமி பலாத்காரம்

அங்கு சிறுமியை அச்சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், வீட்டிற்கு வந்த சிறுமி தனது தாயிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். பின் சிறுமியின் தாய் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை ஏற்ற காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமாகவே, காவல்துறையினர் சிறுவனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

இதையும் படிங்க: வீட்டில் தனியாக இருந்த 4 வயது சிறுமி பலாத்காரம்; புத்தாண்டு அன்று கொடூரம்..!