மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீர் காற்றில் சீட்டுக்கட்டுபோல நொறுங்கி விழுந்த மல்டிலெவல் கார் பார்க்கிங்; 7 பேர் படுகாயம், 50 கார்கள் சேதம்.! வீடியோ உள்ளே.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, வாடாலா பகுதியில் 14 மாடி உயரம் கொண்ட மல்டி லெவல் கார் பார்க்கிங் உள்ளது. இன்று மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது.
சூறைக்காற்றுடன் திடீர் கனமழை
மக்களை கடந்த சில நாட்களாகவே வாட்டி வதைத்த கடும் வெயிலுக்கு மத்தியில், திடீர் மழை மக்களை குளுகுளு சூழ்நிலைக்கு உள்ளாக்கியது. இதனிடையே, 14 மாடிகள் கொண்ட பார்க்கிங் அமைப்பு திடீரென சரிந்து விழுந்தது.
7 பேர் காயம், 50 கார்கள் சேதம்
இந்த விபத்தில் பார்க்கிங் பகுதியில் இருந்த 50 க்கும் மேற்பட்ட கார்கள் கடுமையான சேதம் அடைந்தன. மேலும், அப்பகுதியில் இருந்த 7 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
#WATCH | #Mumbai: 14-Storey Metal Parking Lot Collapses In #Wadala East After Heavy Rains#MumbaiRains pic.twitter.com/L8EudrBY8d
— Free Press Journal (@fpjindia) May 13, 2024