திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கள்ளக்காதலன் தற்கொலையால் மனமுடைந்த இளம்பெண்..!! அதே நாளில் தீக்குளித்த சோகம்..!!
கள்ளக்காதலன் தற்கொலை செய்துகொண்டதால் ஏற்பட்ட சோகத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் மஞ்சு (30). இவர் டெல்லி, குருகிராம் பகுதியில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அத்ற் பகுதியில் இயங்கிவரும் பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்தவர் பாபுலால். இவருக்கு திருமணமாகி மனைவியும் 1 குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில், பாபுலாலுக்கு மஞ்ச்சுவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. அடிக்கடி தனியே சந்தித்துக் கொள்ளும் இவர்கள் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதற்கிடையே, பாபுலால் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை, தான் வைத்திருந்த சட்டவிரோத நாட்டு துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து குருகிராம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பாபுலால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்த மஞ்சு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த மஞ்சு, கள்ளக்காதலன் தற்கொலை செய்து கொண்ட அதே நாள் இரவு தனது உடலில் மண்ணெண்னை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
தீ பற்றி எரிந்ததால் அலறி துடித்த மஞ்சுவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்துவந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த குருகிராம் காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில் கள்ளக்காதலன் தற்கொலை செய்துகொண்ட சோகத்தால் இளம்பெண் மஞ்சுவும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது.