மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து பயங்கர விபத்து; 6 பேர் பலி., 6 பேர் படுகாயம்.!
உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் மாவட்டம், ஒக்கல்கண்டா, பூடாபுரி கிராமத்தை நோக்கி பிக்கப் டிரக் வாகனம் ஒன்று பயணம் செய்தது. இந்த வாகனத்தில் சுற்றுலாப்பயணிகள் இருந்ததாக தெரியவருகிறது. வாகனம் மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டு இருந்தது.
6 பேர் பலி
இந்நிலையில், நேற்று மாலை 06:30 மணியளவில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், ஒக்கல்கண்டா பகுதியில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: பாஜக வேட்பாளரின் கார் மோதி 2 சிறார்கள் பலி., உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்.!
பலமணிநேர போராட்டத்திற்கு பின் உடல் மீட்பு
மேலும், 6 பேர் உயிருக்கு துடிதுடித்து அலறி இருக்கின்றனர். இரவு நேரம் என்பதால், மீட்பு பணிகள் உடனடியாக கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்பு பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள், விபத்தில் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
#Nainital #नैनीताल: सड़क हादसे में 6 लोगों की #मौत, 4 लोग #घायल
— Goldy Srivastav (@GoldySrivastav) June 6, 2024
ओखलकांडा से खंस्यू से पतलोट जा रही #टैक्सी #गहरी_खाई में #गिरी@nainitalpolice_ #Uttarakhand #Accident #Roadaccident @ukcmo #Nainital #Accident @uttarakhandcops pic.twitter.com/I44cqEpHTG
இதையும் படிங்க: கூகுள் மேப் காட்டிய வழியால் கால்வாயில் பாய்ந்த கார்.. இன்ப சுற்றுலாவில் திகில் சம்பவம்.!