9-ஆம் வகுப்பு பாடத்தில் அபிநந்தனின் வீரதீரம்; பள்ளிக்கல்வித்துறையின் அருமையான முயற்சி.!



indian-army---abinanthan---9th-std---rajastan-school-ed

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் போர் விமானங்களை துரத்தி அடித்து விரட்டிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தனின் விமானத்தை துரதிஷ்டவசமாக பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதனால் பாராசூட் மூலம் குதித்த அபிநந்தன் இந்திய எல்லையில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள பிம்பர் மாவட்டம் கரோன் என்ற பகுதியில் தரையிறங்கினார்.

இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் சிலரால் தாக்கப்பட்டாலும் இறுதி வரை வீரத்துடன் போராடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். அதன் பிறகு அங்கு வந்த பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு இடையே விடுதலை செய்யப்பட்டார். இதனால் இந்தியா முழுவதும் அபிநந்தனின் பெயரும் அவருடைய வீர தீர செயலும் பிரபலமடைந்தது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில பள்ளி கல்வித்துறையின் ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் புதிய பாடத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் வீர தீரம் என்ற தலைப்பில் இந்திய ராணுவ வீரர்களின் வரலாறு இடம்பெற்றுள்ளது. இந்தியாவிற்காக போராடிய வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களுடைய வீர தீர செயல்கள் இடம்பெற்றுள்ளது. அதில் அபிநந்தனின் வீர தீர செயலும் இடம்பெற்றுள்ளது.