திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கணவனை கைவிட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி: ரூ.2.5 லட்சம் அபேஸ்.. லோன் வாங்கிய கணவன் குமுறல்.!
தனது அன்பு மனைவி நல்ல வேலைக்கு சென்று, நாமும் உழைத்தால் விரைவில் முன்னேறலாம் என எண்ணி கனவில் மிதந்த கணவனை கைவிட்டு, பணத்தை சுருட்டிக்கொண்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்ணின் களவாணித்தனம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கெகோடா மாவட்டம், காதின் நகரில் வசித்து வருபவர் டிங்கு யாதவ். அங்குள்ள பதவுனா பகுதியை சேர்ந்தவர் பிரியா குமாரி. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் காதலாக மாறியதாக தெரியவருகிறது.
இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து புதிய வாழ்க்கையை தொடங்கிய நிலையில், மனைவி இறுதி ஆண்டு நர்சிங் படித்து முடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட டிங்கு, தனது சொந்த செலவில் படிக்க வைத்துள்ளார்.
பின்னர், ரூ.2.5 இலட்சம் பணம் இருந்தால், மருத்துவமனையில் நல்ல வேலை கிடைக்கும். அதன் வாயிலாக வருமானம் வருவதை, நாம் இருவரும் சேர்ந்து அடைத்துவிடலாம் என தம்பதிகள் திட்டமிட்டு இருக்கின்றனர்.
இதனையடுத்து, டிங்கு தனது சுய முயற்சியில் ரூ.2.5 இலட்சம் லோன் வாங்கிய நிலையில், பணத்தை பெற்ற மீனா குமாரி தனது காதலருடன் ஓட்டம் பிடித்து டிங்குவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இதனால் பதறிப்போன டிங்கு தற்போது செய்வதறியாது திகைக்கும் நிலையில், உணவு டெலிவரி பாயாக வேலைபார்த்து வரும் டிங்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்த அவர் கூறுகையில், நான் எனது மனைவி நல்ல வேலைக்கு சென்று, நானும் வேலையில் இருந்தால் குடும்பத்தை விரைந்து முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லலாம் என என்னால் ஆன உதவியை செய்தேன்.
அவர் கேட்ட ரூ.2.5 இலட்சம் பணத்தையும் ஏற்பாடு செய்தேன். அவர் தற்போது மற்றொருவருடன் சென்றுவிட்டார். லோன் எடுத்த தொகை அதிகம். அவரும் உடன் இருப்பார் என மாத தவணைக்கு ஒப்புக்கொண்டேன். இப்போது என்ன செய்வது என தெரியவில்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்" என கூறியுள்ளார்.