திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பல்வலி சரியாக அரளி விதை?.. யூடியூப் பார்த்து சிகிச்சை எடுத்த இளைஞர் பரிதாப பலி; மக்களே உஷார்.!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக், நூதனகர் பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் அஜய் மக்தோ. இவர் விடுதியில் தங்கியிருந்து போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார்.
கடந்த சனிக்கிழமை அவருக்கு கடுமையான பல் வலி ஏற்படவே, யூடியூபில் வீடியோ பார்த்து சுயமாக சிகிச்சை எடுத்ததாக தெரியவருகிறது. இதனால் அவருக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிகிச்சைக்காக அங்குள்ள ஹசாரிபாக் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில், அவர் பல்வலியை சரிசெய்ய அரளி விதைகளை பயன்படுத்தி வந்தது அம்பலமானது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அரளி விதை மற்றும் காய் மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்து கொண்டவை என்பது நாடறிந்த விஷயம். இந்த நிலையில் அறியாமையால் இளைஞர் யூடியூப் வீடியோ பார்த்து பலியான சோகம் நடந்துள்ளது.