திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தண்டவாளத்தில் அறுந்து கிடந்த மின்கம்பிகள்; 130 கி.மீ வேகத்தில் சடன் பிரேக்.. 2 பேர் பரிதாப பலி.!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடெர்மா மாவட்டத்தில், நேற்று நள்ளிரவு 12:05 மணியளவில் பூரி - புதுடெல்லி இடையே பயணிக்கும் விரைவு இரயில் பயணம் செய்தது.
இந்த இரயில் கோமஹ் - கோடெர்மா இரயில் நிலையங்களுக்கு இடையே பயணிக்கும்போது, இரயில் ஓட்டுநர் மின்கம்பிகள் அறுந்து தொங்குவதை கண்டுள்ளார்.
இரயில் 130 கி.மீ வேகத்தில் பயணித்ததாக தெரியவரும் நிலையில், ஓட்டுநர் இரயில் விரைந்து நிற்கும் வகையில் பிரேக் அடித்துள்ளார். இதனால் இரயில் குலுங்கி நின்றுள்ளது.
இந்நிலையில், இரயில் பயணம் செய்த 2 இளைஞர்கள் கீழே விழுந்து பரிதாபமாக பலியாகினார். மேலும், தகவல் அறிந்த இரயில்வே அதிகாரிகள், விரைந்து மின்சாரத்தை துண்டித்தனர்.
நிகழ்விடத்திற்கு மற்றொரு டீசல் எஞ்சினை அனுப்பி வைத்து, மேற்படி இரயில் பயணிக்க வழிவகை செய்தனர்.