திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#BigBreaking: இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரேசில் நாட்டு இளம்பெண் 8 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நண்பரை தாக்கி பயங்கரம்.!
உலகளவில் சுற்றுலாவுக்கு பெயர்போன நாடாக மாறி வரும் இந்தியாவில், வெளிநாட்டவரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி சிறிய அளவிலான குற்றங்கள் நடந்து வந்தன. தற்போது நடந்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றன.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா மாவட்டம், குர்மஹத் கிராமத்தில் நேற்று இரவு 10 மணியளவில், பிரேசில் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளாக ஜோடி தங்கி இருந்தது.
அப்போது, உள்ளூரை சேர்ந்த 8 பேர் கும்பல் சுற்றுலா பயணிகளை கண்ட நிலையில், ஆணை கடுமையாக தாக்கியது. அவரின் வாயில் ஹெல்மட் மற்றும் கற்களை கொண்டு கடுமையாக தாக்கி சிதைத்தது.
பின் அவருடன் இருந்த பெண்ணை ஏழு முதல் எட்டு பேர் கும்பல் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்தது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி மற்றும் அவரின் நண்பர் கயவர்களின் பிடியில் இருந்து தப்பி வந்தனர்.
அங்குள்ள ஹன்ஷிதிகா காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கவே, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முதற்கட்டமாக 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. எஞ்சிய நபர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது.
பிரேசில் தூதரக அதிகாரிகள் குழு ஜார்கண்ட் மாநிலம் விரைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.