மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவர் இறந்த செய்திகேட்டு, 6 வயது மகனை கொன்று தாய் தற்கொலை.. குடும்பமே உருக்குலைந்த பரிதாபம்.!
கணவன் உயிரிழந்த தகவலை கேட்ட மனைவி, தனது 6 வயது மகனை கொன்று, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் பகுதி, தீயணைப்புத்துறையில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருபவர் கங்காதரா கம்மாரா வயது (36). இவருக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், மங்களூரு நகரில் உள்ள குந்திக்கான் ஜங்ஷன் என்ற இடத்தில் ஏற்பட்ட கொடூர விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், கணவர் உயிரிழந்த தகவலை கேட்டதும், துக்கம் பொறுக்க முடியாமல் கங்காதரா கம்மாராவின் மனைவி தனது 6 வயது மகனை கொன்று விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.