மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை.. விபச்சார கும்பல் புதிய முறையில் கைவரிசை.. 16 பேர் பரபரப்பு கைது.. பகீர் தகவல்.!
விபச்சார கும்பலை சேர்ந்த 16 பேர் காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் பல்வேறு பதைபதைப்பு தகவல் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டமான தக்ஷிண கன்னடாவின் தலைநகர் மங்களூரில் விபச்சாரம் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. சிறுமிகள், ஏழ்மையில் உள்ள பெண்கள் மற்றும் திருமணமான இளம்பெண்களை குறிவைத்து மர்ம நபர்கள் ஆசைவார்த்தை கூறி விபச்சாரத்தில் தள்ளும் துயரம் நடந்து வருகிறது. இந்த கும்பலை கைது செய்ய காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், மங்களூர் நகரில் விபச்சார தொழில் நடத்தி வந்த 16 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஏழ்மையில் உள்ள இளம்பெண்கள், சிறுமிகளை குறிவைத்து விபச்சாரத்தில் தள்ளியது அம்பலமானது. இந்த விஷயம் தொடர்பாக மங்களூர் மாநகர காவல் துணை ஆணையர் ஹரிராம் சங்கர் தெரிவிக்கையில், "மங்களூரில் நடந்த விபச்சாரம் தொடர்பான வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஏழ்மையில் உள்ள இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து ஆசைவார்த்தை கூறி, பணத்தாசை காண்பித்து விபச்சாரத்தில் தள்ளி இருக்கின்றனர். இவர்கள் பல குழுவாக பிரிந்து திரையரங்கம், வணிக வளாகம் போன்றவற்றில் நோட்டமிட்டு ஏழை பெண்களின் விபரத்தை சேகரித்து, நட்பாக பழகி பிரச்சனையை கேட்டறிந்து ஆறுதலாக பேசி மூளைச்சலவை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி இருக்கின்றனர்.
முதலில் பெண்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து, அவர்களுக்கு உதவி செய்வது போல நடித்து ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டி விபச்சாரத்தில் தள்ளியுள்ளனர். இவர்களின் மிரட்டலுக்கு பயந்துபோன பெண்கள் மற்றும் சிறுமிகள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் பின்னனியில் உள்ள முக்கிய புள்ளிகள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அவர்களும் கைது செய்யப்படுவார்கள்.
கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகள், இளம்பெண்கள் தங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் வந்து பேசினால் அல்லது பரிசு, பணம் கொடுத்தால் பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். உங்களின் இயலாமையை அவர்கள் மூலதமாக மாற்றி, பின்னாளில் அவர்கள் உங்களை ஆட்கொள்வார்கள். ஆகையால் சுதாரிப்புடன் இருக்க வேண்டும். இவ்விபச்சார கும்பலால் யாரேனும் பாதிக்கப்பட்டு இருந்தால் புகார் அளிக்கலாம். பெண்களின் தனிப்பட்ட விபரம் பாதுகாக்கப்படும்" என்று தெரிவித்தார்.
Note: Title image Representative