மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தோழி போல பழகி, இந்துவை முஸ்லீமாக மாற்ற முயற்சி?.. குடும்பமே கொலை, கணவர் தற்கொலை.!!
பெண்ணிடம் நட்பாக பழகி அவரை முஸ்லீம் மதத்திற்கு மாற்ற முயற்சி நடந்த நிலையில், இந்து கணவர் மதம் மாற்றத்திற்கு பயந்து மனைவி, குழந்தைகளை கொலை செய்து, தானும் தற்கொலை செய்துகொண்டார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட்டை மாவட்டம், பீலாகி சுனகா கிராமத்தை சார்ந்தவர் நாகேஷ் (வயது 30). இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 26). இவர்கள் இருவருக்கும் சப்னா என்ற 8 வயது மகளும், சமர்த் என்ற 4 வயது மகளும் பிள்ளைகளாக உள்ளனர். இவர்கள் அனைவரும் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூரில் வசித்து வருகிறார்.
நாகேஷ் கார் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், விஜயலட்சுமி வணிக வளாகத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். தம்பதிகள் இருவருக்கும் இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக விஜயலட்சுமி திடீரென மாயமாகி இருக்கிறார். தனது மனைவியை கண்டறிந்துதரக்கூறி நாகேஷும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் காவல் துறையினர் விஜயலட்சுமியை தேடி வந்த நிலையில், விஜயலட்சுமி காவல் நிலையத்திற்கு சென்று கணவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, கணவருடன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று காலை விஜயலட்சுமிக்கு வேலைக்கு செல்லாத நிலையில், அவரது செல்போனுக்கு உடன் பணியாற்றுபவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், விஜயலட்சுமி அழைப்பை எடுக்கவில்லை.
நேற்று காலை நேரத்தில் நாகேஷின் வீட்டு கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாமல் இருக்கவே, அக்கம் பக்கத்தினர் சந்தேகித்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கையில் நாகேஷ் பிணமாக தூக்கில் தொங்கியுள்ளார். விஜயலட்சுமி மற்றும் 2 குழந்தைகள் வாயில் நுரைதள்ளி பிணமாக இருந்துள்ளனர். இதுகுறித்து மங்களூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த நாகேஷ், அவர்கள் இறந்ததும் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தம்பதியின் அறையில் நடத்திய சோதனையில், நாகேஷ் எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.
அந்த கடிதத்தில், "மனைவி விஜயலட்சுமியும், நூர்ஜஹான் என்ற பெண்ணும் பழகி வந்தார்கள். நூர்ஜஹான் எனது மனைவி விஜயலட்சுமியை முஸ்லீம் மதத்திற்கு மாற்ற முயற்சி செய்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே எனது மனைவியின் செயல்பாடுகளும் சரியில்லை. இதனால் அவர் முஸ்லீம் மதத்திற்கு மாறிவிடுவர் என்ற பயத்தில் மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து, நானும் தற்கொலை செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இந்த கடிதத்தை கைப்பற்றியுள்ள காவல் துறையினர், நூர்ஜஹானை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.