மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சீரழிந்த மாநிலம்?.. போதைப்பொருள் வழக்குகள் 3 வருடத்தில் கிடுகிடு அதிகரிப்பு.!
கடந்த 3 வருடத்தில் கர்நாடக மாநிலத்தில் போதைப்பொருட்கள் வழக்கு அதிகரித்து இருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.
நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப்பொருள் உபயோக வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய காவல் துறையினர் தொடர்ந்து தீவிரத்துடன் செயலாற்றி வருகின்றனர். பெங்களூரில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களிடம் போதைப்பொருளை கைப்பற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த 3 வருடமாக கர்நாடக மாநிலத்தில் போதைப்பொருள் உபயோகம் மற்றும் விற்பனை தொடர்பான வழக்கு அதிகரித்து இருக்கிறது. கடந்த 2019 ஆம் வருடத்தில் போதைப்பொருள் தொடர்பான வழக்கு 1,235 பதிவாகியிருந்த நிலையில், 2020 ஆம் வருடத்தில் 2,844 வழக்குகள் பதிவாகியுள்ளது. இவ்வருடத்தில் ஜனவரி முதல் அக். மாதம் வரை மட்டும் 2,575 வழக்குகள் பதிவாகியுள்ளன.
போதைப்பொருளை விற்பனை செய்ததாக கடந்த 2019 ஆம் வருடம் 1,658 வழக்குகள் பதிவான நிலையில், 2020 ஆம் வருடம் 4,052 வழக்குகளும், 2021 ஆம் வருடத்தில் ஜனவரி முதல் அக். வரை மட்டும் 4,656 வழக்குகள் பதிவாகியுள்ளன. குற்றம் சட்டப்பட்டவர்களில் 2019 ஆம் வருடம் 378 பேருக்கும், 2020 ஆம் வருடம் 871 பேருக்கும், 2021 ஆம் வருடம் 471 பேருக்கும் தண்டனைகள் கிடைத்துள்ளன.
நீதிமன்றத்தின் எண்ணிக்கை மற்றும் தடய அறிவியல் மையத்தின் எண்ணிக்கை காரணமாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றம் சிவில் வழக்கையும் விசாரணை செய்து வருவதால், போதைப்பொருள் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. மைசூர், மங்களூர், தாவணகெரே, பெலகாவி, கலபுராகி, பெங்களூர் உட்பட 6 இடங்களில் மட்டுமே தடய அறிவியல் மையமும் உள்ளன.