அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
மருமகளை பழிவாங்குவதாக எண்ணி, பேத்தியை நாய்க்கு காவுகொடுத்த பாட்டி.. பேரதிர்ச்சி சம்பவம்.. கண்ணீரில் பெற்றோர்.!
பேத்தியை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்ற போது நாய் கடித்த நிலையில், மருமகளை பழிவாங்க எண்ணி பாட்டி செய்த படுபாதக செயலால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டம், குனிகள் சாசலு கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயம்மா. இவரின் மகன் புட்டராஜு. புட்டராஜுவிற்கும் - ஜெயம்மாவுக்கும் கடந்த 3 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய திரிஷா என்ற பெண் குழந்தை இருக்கிறார்.
இந்நிலையில், மாமியார் ஜெயம்மாவுக்கும் - மருமகள் சிக்கமாவுக்கும் இடையே அவ்வப்போது தகராறு நடப்பது வாடிக்கையாகியுள்ளது. இதனால் மருமகளின் மீது ஜெயம்மாள் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். கடந்த மாதம் ஜெயம்மா தனது பசுமத்தினை மேய்ச்சலுக்காக சென்ற போது, உடன் தனது பேத்தியையும் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, தெரு நாய் ஒன்று குழந்தை திரிஷாவையும், பசுமாட்டினையும் கடித்து குதறிய நிலையில், மருமகளை பழிவாங்குவதாக நினைத்து குழந்தை திரிஷாவை ஜெயம்மா காப்பாற்றாமல் இருந்துள்ளார். நாய் கடித்த 5 நாட்களில் பசு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், குழந்தைக்கு 40 நாட்கள் கழித்து உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குழந்தையின் பெற்றோர் மகளை மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்து அவரை நாய் அல்லது பூனை கடித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அப்போது, ஜெயம்மாவிடம் விசாரித்ததுபோது உண்மை தெரியவந்துள்ளது.
சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று திரிஷா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த குனிகள் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.