கணவனை கார் ஏற்றி கொன்று, விபத்து போல் நாடகமாடி போலீசை சுத்தலில் விட்ட பலே கைகாரி..!
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரை சேர்ந்தவர் ரமேஷ் பட்டேல். இவரது மனைவி பிரேமிகா குட்டி. இவர் சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது நேரத்தை அதிகம் செலவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில், பிரேமிகாவுக்கு சங்கர் படேல் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமாகி உள்ளார். நாளடைவில் இவர்களுக்கு இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்காதலால், இன்ஸ்டாகிராம் மோகம் பிரேமிகா குட்டிக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் எப்போதும் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கும் மனைவியின் நடத்தையால் ரமேஷ் பட்டேல் ஆத்திரம் அடைந்துள்ளார். பல முறை எடுத்து கூறியும் பிரேமிகா திருந்தவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் எரிச்சலடைந்த பிரேமிகா கணவன் இருந்தால் தன்னால் கள்ளக்காதலை தொடர முடியாது என்பதால் கணவனை கொலை செய்ய திட்டமிட்டார்.
பின்னர் சங்கர் படேலிடம் தனது கணவர் ரமேஷ் பட்டேலை கொலை செய்ய வேண்டும் எனபிரேமிகா கூறி உள்ளார். மோக வலையில் மூழ்கியிருந்த இருந்த சங்கர் படேல் கொலைக்கு திட்டம் போட்டு டெல்லியில் இருந்து பழைய எஸ்.யூ.வி காரை வாங்கியுள்ளார். மேலும், ரமேஷ் படேலின் நடமாட்டம் குறித்து பிரேமிகாவிடம் சங்கர் படேலுக்கு அவப்போது கூறிவந்துள்ளார்.
கடந்த ஜூலை 17 ஆம் தேதி ரமேஷ் படேல் தனது உறவினர் கவிதாவை அழைத்துக்கொண்டு லூனியிலிருந்து ஜோத்பூருக்கு பைக்கில் புறப்பட்டார். இது குறித்து தகவலறிந்த சங்கர் திட்டமிட்டு காத்திருந்தார். ரமேஷ் படேல் லூனி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தை விட்டு வெளியேறும் போது, அவரது பைக் மீது கார் சங்கரின் மோதியது. என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்கு முன்பாகவே பைக்கை சங்கரின் கார் சுமார் 200 மீட்டர் இழுத்துச் சென்றது.
இதன் காரணமாக ரமேஷ், கவிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதலில் இது பயங்கர விபத்து என கூறப்பட்டது கொலை ஏன் நடந்தது என்பது குறித்து எந்த காவல்துறையினருக்கு எந்த விதமான துப்பும் கிடைக்கவில்லை. இருவரையும் கொலை செய்தது யார் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது.
இந்த நிலையில், விசாரணையை. ரமேஷ் படேலின் குடும்பத்தினரிடமிருந்து காவல்துறையினர் துவக்கினர். விசாரணையில், சங்கருக்கும், பிரேமிகாவுக்கும் இடையிலான முறைகேடான தொடர்பு இருந்ததும், நடந்தது விபத்தல்ல திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்தது. இதனையடுத்து பிரேமிகா உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளி சங்கரை தேடி வருகின்றனர்.