மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிவசேனாவுக்கு உச்சகட்ட சவால்.. முன்னாள் மராட்டிய முதல்வர் பரபரப்பு பேட்டி.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகா விலாஸ் அகாடி கூட்டாட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பதவி வகிக்கிறார். துணை முதல்வராக தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் இருக்கிறார்.
மராட்டியத்தில் சட்டப்பேரவை தேர்தலின் போது ஓரணியாக தேர்தலை சந்தித்த பாஜக மற்றும் சிவசேனா, தேர்தல் முடிவுக்கு பின்னர் முதல்வர் பதவி பிரச்சனையில் பிரிந்தது. சிவசேனா தனது கொள்கைக்கு நேரெதிர் கொள்கை வைத்துள்ள இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. இதன்பின்னர், மகாராஷ்டிரத்தில் சிவசேனா - பாஜக இடையே பல்வேறு கருத்து மோதல் சம்பவம் நடந்து வருகிறது.
இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் பாஜக தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், "பாஜக மராட்டியத்தில் ஆட்சியில் இருந்த வரை சிவசேனா பிறக்கவில்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். எங்களுடன் அவர்கள் இருந்த வரை நம்பர் 1 கட்சியாக இருந்தார்கள்.
தற்போது, அவர்கள் மாநிலத்தில் 4 ஆவது இடத்திற்கு சென்றுள்ளனர். நான் சிவசேனா கட்சியினருக்கு சவால் விடுகிறேன். காங்கிரசுக்கு அவர்கள் எவ்வுளவு ஒத்துழைத்தாலும், அவர்களுக்காக தங்களின் கொள்கையை மறந்து பேசினாலும், ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் ட்விட்டர் கணக்கில் இருந்து, பாலாசாகேப் தாக்கரேவுக்காக ஒரேயொரு ட்விட் பதிவு செய்ய கூற முடியுமா?.
ராமர் கோவில் விவகாரத்தில் சிவசேனா பேச்சுக்கள் மட்டுமே பேசி வந்தது. ஆனால், நாங்கள் தோட்டாக்கள் மற்றும் தடியடியை எதிர்கொண்டவர்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.