அதிரடி நடவடிக்கை..! 3,215 போக்குவரத்து துறை ஊழியர்கள் பணியிடைநீக்கம்.!



Maharashtra Govt Bus Employee 3215 Persons Suspended due to Strike

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 28 ஆம் தேதி மாநில சாலை போக்குவரத்து கழகத்தை மாநில அரசோடு இணைக்க வேண்டும் என எஸ்.டி பேருந்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். தற்போது வரை போராட்டம் நடந்து வரும் நிலையில், மும்பை நீதிமன்றம் கண்டித்ததை மீறியும் போராட்டம் நடந்து வருகிறது. 

இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் அனில், பேருந்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்தார். நேற்று முன்தினம் அரசு பேருந்து ஊழியர்கள் பணிக்கு திரும்பவும் கேட்டுக்கொண்ட நிலையில், உடனடியாக பணிக்கு வராதவர்கள் சம்பளம் பிடித்தம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

maharashtra

இந்த எச்சரிக்கையையும் மீறி நேற்று 31 ஆவது நாளாக போராட்டம் நடந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். மாநில போக்குவரத்து கழகம் தற்போது வரை மொத்தமாக 3 ஆயிரத்து 215 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஒப்பந்த பணியாளர்கள் 1226 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 10 ஊழியர்கள் இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். 

அமைச்சரின் கடும் எச்சரிக்கைக்கு பின்னர் 92 ஆயிரத்து 266 பேரில் 18 ஆயிரத்து 90 பேர் பணிக்கு வந்துள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்து 130 பேர் ஓட்டுனர்கள், 2 ஆயிரத்து 112 பேர் நடத்துனர்கள். அம்மாநிலத்தில் நேற்று மதியம் 2 மணிவரை 313 சாதாரண பேருந்துகளும், பிற பேருந்துகளும் என 410 பேருந்துகள் இயக்கப்பட்டது.