மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து, வாட்சப் ஸ்டேட்ஸில் வைத்து வரதட்சணை கொடுமை.. அதிர்ச்சி சம்பவம்.!
தனது மனைவி வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் கணவன் மனைவியின் குளியல் விடியோவை வாட்சப் ஸ்டேட்ஸில் வைத்து மிரட்டிய பயங்கரம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பிவாண்டி பகுதியை சார்ந்த 28 வயது பெண்மணி, குரார் பகுதியை சார்ந்த 30 வயது நபரை, கடந்த 2015 ஆம் வருடம் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ள நிலையில், திருமணத்தின் போதே பெண் வீட்டார் சார்பாக ரூ.12 இலட்சம் செலவு செய்து திருமணம் நடத்தப்பட்டுள்ளது. மேலும், ரூ.5 இலட்சம் மதிப்புள்ள நகைகள் வழங்கப்பட்டது.
திருமணம் முடிந்து 2 குழந்தைகள் பிறந்த பின்னரும் வரதட்சணை கேட்டு மனைவியை கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனால் அவ்வப்போது தம்பதிகளுக்கிடையே தகராறு நடந்து, மனைவி அவரது தாயாரின் வீட்டிற்கு சென்று வசிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். பின்னர், கணவர் சில நாட்களில் சமாதானம் செய்து மனைவியை தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் இருவருக்குள்ளும் மீண்டும் வரதட்சணை தகராறு ஏற்பட்ட நிலையில், மனைவி குளிப்பதை அவருக்கு தெரியாமல் வீடியோ பதிவு செய்து வைத்துக்கொண்ட கணவன், மனைவி அவரின் பெற்றோர் வீட்டிற்கு சென்றதும் விடியோவை வாட்சப் ஸ்டேட்ஸில் வைத்துள்ளார். இந்த விடியோவை பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி பார்த்து குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கணவருக்கு ஆவேசத்துடன் தொடர்பு கொண்ட பெண்மணி கண்டனம் தெரிவிக்கையில், வரதட்சணை கொடுக்கவில்லை என்றால் விடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் ஆலோசனை செய்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.