பிறந்த பச்சிளம் குழந்தையை கடத்திய மூவர் கும்பல் கைது: தம்பதியை நோட்டமிட்டு திட்டத்தை அரங்கேற்றிய பகீர் சம்பவம்.!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, இரயில்வே காவல்துறையினர் குழந்தை கடத்தல் தொடர்பான 3 பேர் கும்பலை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து விற்பனை செய்யப்பட்ட பிறந்து 2 மாதமாகும் பச்சிளம் குழந்தையும் மீட்கப்பட்டது.
நேற்று பிறந்து இரண்டு மாதமேயான பச்சிளம் குழந்தை அம்பேரநாத் பகுதியில் இருந்து கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ரூ.1.5 இலட்சத்திற்கு குழந்தை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 16ம் தேதி பச்சிளம் குழந்தை போரிவலி பகுதியில் தங்கியிருக்கும் ஏழ்மையான தம்பதிக்கு பிறந்துள்ளது. குழந்தை மாயமாவதற்கு 3 நாட்கள் முன்னதாக இளைஞர் ஒருவர் குழந்தைக்கு பால் உட்பட அத்தியாவசிய பொருட்கள் வாங்கிக்கொடுத்து பின்புலத்தை அறிந்துகொண்டு இருக்கிறார்.
இதனையடுத்து, சம்பவத்தன்று தங்களின் திட்டப்படி குழந்தையை கடத்திச்செல்ல, தனது குழந்தை கடத்தப்பட்டதை உணர்ந்த 18 வயது பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து அப்பாஸ் காசிம் ஷேக் (வயது 22) என்பவர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதை உறுதி செய்தனர். அவர் குழந்தைகடத்தல் கும்பலை சேர்ந்த சையத் மெஹ்தியிடம் (வயது 27) குழந்தையை ஒப்படைத்து இருக்கிறார்.
இவர்கள் தம்பதிகளிடம் இருந்து குழந்தையை கடத்தி, பல ஆண்டுகளாக குழந்தை இன்றி வசித்து வந்த நபருக்கு விற்பனை செய்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை தொடருகிறது.