அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
பஸ்ல இடம்பிடிக்க இந்த பெரியவர் எண்ணலாம் பன்றாரு பாருங்க..! இணையத்தில் தீயாகப் பரவும் வீடியோ!
பஸ்ல இடம்பிடிக்க தனது மனைவியை ஜன்னல் வழியாக அனுப்பிய பெரியவர் செஞ்ச காரியம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
கூட்டமான நேரங்களில் பேருந்தில் இடம் கிடைப்பது என்பது சவாலான ஒன்று. பலர் பேருந்தில் இடம் கிடைக்கவேண்டும் என்பதற்காக தங்கள் கையில் வைத்திருக்கும் பொருட்களை வைத்து இடம் பிடிப்பது வழக்கம். ஆனால் இங்கு நபர் ஒருவர் மிகவும் வித்தியாசமான முறையில் பேருந்தில் இடம் பிடித்துள்ளார்.
பேருந்தில் ஜன்னல் வழியாக தன் மனைவியை தலைக்கு மேல் தூக்கி உள்ளே விடுகிறார். அந்த வயதான பெண்மணியும் மிகவும் சிரமப்பட்டு ஜன்னல் வழியாக பேருந்து உள்ளே சென்று, தனது இருக்கையில் அமர்கிறார். பேருந்தில் உட்கார்ந்து போவது அனைவருக்கும் பிடித்த விசயம் தான். அதற்காக இப்படியெல்லாமா செய்வார்கள்? என நெட்டிசன்கள் ஆச்சர்யத்தில் மூழ்கிப்போயுள்ளனர்.