மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமண பந்தியில் ஸ்வீட் தீர்ந்ததால் தகராறு.. 6 பேர் படுகாயம்.!
திருமண விருந்தில் ரசகுல்லா தீர்ந்ததால் ஏற்பட்ட மோதலில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்ஷாபாத் பகுதியில் நேற்று முன்தினம் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இரவு விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், திருமண நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்களுக்கு, அங்கிருந்தவர்கள் இரவு விருந்து பரிமாறினர்.
அப்போது உணவு வங்கியில் பல்வேறு வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. இதில், ரசகுல்லா இனிப்பு தீர்ந்துவிட்டது. இதனால் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.