மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பால் 6 மாத குழந்தையின் வாழ்க்கையை விழுங்கியது..! பிஞ்சு குழந்தையின் மரணத்திற்கு காரணமாக அமைந்த பால்..! பாலால் பறிபோன வாழ்க்கை..!
அடுப்பில் இருந்த சூடான பால் ஊற்றி குழந்தை உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் டியோரியா மாவட்டத்தில் உள்ள துல்ஹு கிராமத்தில் வசிக்கும் பனாரசி என்ற பெண் தனது வீட்டில் கேஸ் மூலம் மூலம் சமைத்துக்கொண்டிருந்துள்ளார். அவருக்கு அருகில் அவரது நான்கு வயது மகள் பூஜா விளையாடிக்கொண்டிருந்துள்ளார். இதனிடையே வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த பனாரசியின் 6 மாத குழந்தை சூரஜ் வீட்டிற்குள் வந்துள்ளான்.
அம்மா சமைத்துக்கொண்டிருக்கும் இடத்திற்கு சென்ற சூரஜ் தடுமாறி தனது சகோதரி பூஜா மீது விழுந்துள்ளான். இந்த சம்பவத்தில் பூஜா நிலைதடுமாறி சமைத்துக்கொண்டிருந்த தனது தாயின் மீது விழுந்துள்ளார். இந்த எதிர்ப்பாராத நிகழ்வில் அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த சூடான பால் பாத்திரம் மீது பனாரசியின் கைபட்டு பால் பாத்திரம் 6 மாத குழந்தை சூரஜ் மீது விழுந்துள்ளது.
இந்த விபத்தில் சூடான பால் முழுவதும் சூரஜ் மீது ஊற்ற, குழந்தை உடல் வெந்து, வலியில் அலறி துடித்துள்ளது. உடனே குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்ல, அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறி உள்ளன்னர்.
இதனை கேட்டு குழந்தையின் குடும்பமே கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் எங்கு விளையாடினாலும் பெற்றோர்கள் குழந்தைகளின் மீது ஒரு கண் வைத்து, அவர்களை கண்காணித்துக்கொண்டே இருப்பது மிகவும் அவசியமான ஒன்று .