"இது ஒயோ இல்லை, விலகியிரு" - காதல் ஜோடிக்கு கார் ஓட்டுனரின் கறார் எச்சரிக்கை.!



Namma Yatri Cab Driver on Romance 


ஓலா, ஊபர் என பல கால் டாக்சி சேவைகள் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற பெருநரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கால் டேக்சிகளில் அவசரத்திற்கு வேலைக்கு செல்வோர், ஐடி உட்பட பெருநிறுவனங்களின் நல்ல சம்பளத்தில் வேலை பார்ப்போர், நிறுவனத்தின் பயணக்கட்டணத்தை உபயோகம் செய்வோர் பெரும்பாலும் பயணிப்பது உண்டு.

வார இறுதி உட்பட விடுமுறை நாட்களில் காதல் ஜோடிகள், கணவன்-மனைவி என ஜோடியாக பயணம் செய்வார்கள். இவர்கள் ஒருசில நேரம் தனிமை சூழலை, ஓட்டுநர் முன்னால் இருக்கிறார் என்பது தெரிந்தாலும், நீ ரோட்டை பார்த்து வண்டியை ஒட்டு என கூறி முத்தம், நெருங்கல், சிணுங்கல் என சில எல்லைமீறிய செயலில் ஈடுபடுவார்கள். 

இதையும் படிங்க: கும்பாவிஷேகத்தில் நடந்த அசம்பாவிதம்.. கிரேன் உடைந்து நேர்ந்த சோகம்.. ஒருவர் பலி.!

இவ்வாறான நபர்களின் செயலை கண்டிக்க, பெங்களூரில் இயக்கப்பட்டு வரும் நம்ம யாத்ரி என்ற வாகன சேவை மையத்தின் கார் ஓட்டுநர், தனது காரின் நடுப்பக்கத்தில் காதல் ஜோடிகள் எல்லை மீற கூடாது என கண்டிப்புடன் எழுதி போஸ்டர் ஒட்டி இருக்கிறார். 

இதுதொடர்பான போஸ்டரில், இது வாடகை கார். ரோமன்ஸ் இருக்க கூடாது. இது உங்களின் தனிப்பட்ட அறை அல்லது ஒயோ விடுதி இல்லை. அதனால் சற்று விலகியே இருங்கள், அமைதியாக இருங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: காயம்பட்ட சிறுவனுக்கு பெபிக்குயிக் தடவி சிகிச்சை; செவிலியரின் அதிர்ச்சி செயல்.!