மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிறந்த பிஞ்சு குழந்தையை தலைகீழாக பிடித்து தந்தை செய்த கொடூர செயல்.. கதறி துடித்த தாய்.. பதைபதைக்கும் சோக சம்பவம்.!
ஹிமாச்சல பிரதேசம் மண்டி மாவட்டத்தில் உள்ள நாஸ்லோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ் குமார் - மீனா தேவி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் 7 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஹரிஷ், மீனாவை திருமணம் செய்த நாள் முதல் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் மீனாவுக்கு மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை சில தினங்களுக்கு முன் பிறந்துள்ளது. ஆனால் ஹரிஷ் தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று ஆசையாக இருந்த நிலையில் பெண் குழந்தை பிறந்தது அவருக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஹரிஷ் பிறந்த பிஞ்சு குழந்தை என்று கூட பாராமல் குழந்தையை தலைகீழாக பிடித்து குழந்தையின் வாயில் கையை விட்டு கொலை செய்துள்ளார். இதனை பார்த்த குழந்தையின் தாய் கதறி துடித்துள்ளார்.
பின்னர் இறந்த அந்த குழந்தையை தூக்கி கொண்டு வெளியே சென்று விட்டு, சிறிது நேரம் கழித்து தனியே வீடு திரும்பியுள்ளார். அதுமட்டுமின்றி தனது மனைவியிடம் ஹரிஷ் குழந்தையை புதைத்து விட்டதாகக் கூறியுள்ளார்.
கணவரின் செயலால் அதிர்ச்சியடைந்த மீனா, கணவரை குறித்து போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதனை அடுத்து போலீசார் ஹரிஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.