மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்காத பாகிஸ்தான்!. குற்றம்சாட்டிய இந்தியா!
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காமல், அரசியல் ஆதாயம் தேட பாகிஸ்தான் முயற்சிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளில் அதிகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த கொடூர வைரஸ் பரவ தொடங்கியதால் பிரதமர் மோடி, நாடு முழுவதும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, ‘சார்க்’ நாடுகள் ஓரணியில் திரள வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் முயற்சியில், நேற்றுமுன்தினம் ‘சார்க்’ நாடுகளின் வர்த்தக அதிகாரிகள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த மாநாட்டை பாகிஸ்தான் புறக்கணித்தது.
மேலும், இந்த மாநாடு ‘சார்க்’ அமைப்பின் தலைமையில் நடந்தால்தான் உறுதியானதாக இருக்கும் என்று பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கருத்தை பார்த்தால், ‘சார்க்’ விதிமுறைகளை பயன்படுத்தி, இந்தியாவின் முன்முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக உள்ளது என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.