மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேவையா இது! மயில் முட்டையை திருட முயன்ற பெண்! என்ன நடந்தது பார்த்தீங்களா!!
அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் பறவைகள், விலங்குகள் குறித்த பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. அவற்றில் சில ஆச்சரியத்தையும், சில அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும். விலங்குகள் மற்றும் பறவைகள்
மனிதர்களை காட்டிலும் உணர்வுகள் அதிகம் கொண்டவை.
அவைகளிடம் நாம் அன்பாக பழகினால், அவை நம்முடன் அன்பாக பழகும். ஆனால், அவற்றை வெறுப்பேற்றினால் விளைவு பெரிதளவில் இருக்கும். இதுகுறித்த வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாகும்.
இந்தநிலையில், தற்போது இதுபோன்று ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் அடைகாக்கும் தாய் மயிலை தூக்கி வீசிவிட்டு முட்டைகளை திருட முயல்கிறார். இந்தநிலையில் ஆவேசமடைந்த அந்த மயில் மின்னல் வேகத்தில் பறந்து வந்து அப்பெண்ணை தாக்கியுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.