ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
13 வயது சிறுவனை காவல்துறை அதிகாரி சரமாரியாக தாக்கிய சம்பவம்..சர்ச்சையைக் கிளப்பும் சிசிடிவி காட்சிகள்.!

காவல்துறை அதிகாரி ஒருவர் 13 வயது சிறுவனை சரமாரியாக தாக்கிய சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பகுதியில் நந்தேசரி சந்தையில், சனிக்கிழமையன்று இரவு 8.45 மணியளவில், சான்னி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர்,13 வயது சிறுவனை அறைந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறை அதிகாரி கூறியதாவது, "தனது வாகனத்தின் மூலமாக நகரத்தில் உள்ள மற்றொரு காவல் நிலையத்திற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், சாலையை கடக்கும் ஒரு சிறுவன் தன்னை பார்த்து ஏதோ முணுமுணுத்தது போல் இருந்தது. இதன் காரணமாகவே நான் அடித்தேன்" என்று கூறியுள்ளார்.
ஆனால், சிசிடிவி கேமராவில் அவர் வண்டியை விட்டு இறங்கி, சிறுவனை பலமுறை அறைந்து கையை முறுக்கி குத்தியது பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து வதோதரா காவல்துறை கமிஷனர் ஷம்ஷேர் சிங் தனது ட்விட்டர் பதிவில், "காவல்துறையினரின் இதுபோன்ற தவறான நடத்தைகளை எங்களால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. இதன் காரணமாக உடனடியாக அந்த காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும், இது தொடர்பான விசாரணைக்கு பிறகு அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.