திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
10 ஆண்டுகளாக 3 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்: போக்ஸோவில் கைது.!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர், மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக தெரியவருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக வெவ்வேறு சூழ்நிலையில் 3 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவதாக ஆசிரியர் மிரட்டியதால், சிறுமிகளும் விஷயத்தை வெளியே கூறவில்லை.
ஒருகட்டத்தில் ஆசிரியரின் செயல் தொடர்ந்து எல்லை மீறவே, சிறுமிகள் பள்ளிக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோர் விசாரித்தபோது உண்மை அம்பலமாகவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.