மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மணிப்பூரில் மீண்டும் மீண்டும் பயங்கரம்... முதல்வரை விமர்சித்ததற்காக அடித்தே மாணவன் கொலை.!பகீர் சம்பவம்.!
குக்கி மற்றும் மெய்டி இனங்களுக்கு இடையேயான கலவரம் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த கலவரத்திற்கு பல நூற்றுக்கணக்கான மக்கள் இதுவரை பலியாகி இருக்கின்றனர்.
இங்கு நடைபெற்ற சம்பவங்கள் ஒவ்வொன்றாக தற்போது தான் வெளியாகி கொண்டிருக்கின்றன. முன்னாள் சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் மனைவி எரித்து கொல்லப்பட்ட சம்பவமும் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது மணிப்பூர் மாநில முதலமைச்சர் விமர்சித்ததற்காக இளைஞர் ஒருவர் அடித்தே கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் வெளியாகி நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மணிப்பூரிலிருந்து தினமும் வரும் செய்திகள் மக்களை அதிர்ச்சி அடைய செய்கிறது .
மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சரை விமர்சித்ததற்காக வாய் பெய் என்ற 21 வயது கல்லூரி மாணவரை ஏப்ரல் 30ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர். கைது செய்யப்பட்ட மாணவனை காவலர்கள் அழைத்துச் செல்லும்போது வழிமறித்த கும்பல் அந்த மாணவனை அடித்தே கொலை செய்திருக்கிறது. தற்போது இந்த சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.