ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்.. 16 மாணவிகளிடம் அத்துமீறல்.. பள்ளி ஆசிரியர் தலைமறைவு.!
கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம் அருகே உள்ள இருளாயி பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்காக சமீபத்தில் ஒரு புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த புகார் பெட்டியை வாரத்திற்கு ஒருமுறை ஆசிரியர்கள் திறந்து மாணவர்களின் குறைகளை தெரிந்து கொண்டு தீர்வு காண்கின்றனர்.
அதன்படி வழக்கம் போல் இந்த புகார் பெட்டியை திறந்து அதில் உள்ள கடிதங்களை படித்த ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் காத்திருந்தது. அதன்படி அந்த புகார் பெட்டியை திறந்து மாணவிகளின் கடிதங்களை படித்ததில் முகம்மது நவ்ஷார் என்ற ஆசிரியர் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 16 மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனை படித்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மலப்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பள்ளிக்கு விரைந்த போலீசார் மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில் ஆசிரியர் மீதான பாலியல் குற்றம் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் முகம்மது நவ்ஷார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆசிரியரை தீவிரமாக தேடி வருகின்றனர்.