மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மேடையில் பாடி பிரச்சாரம்.! திடீரென நுழைந்து இளைஞர் செய்த காரியத்தால் ஆவேசமான சீமான்.! வைரல் வீடியோ!!
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2024 லோக்சபா தேர்தலில் தேர்தல் ஆணையம் கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கிய நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் வழங்கப்பட்டது.
கட்சி சின்னம் பறிபோனாலும் நாம் தமிழர் கட்சியினர் துவண்டு விடாமல் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான் கிருஷ்ணகிரி வேட்பாளர் வித்யாராணி வீரப்பனை ஆதரித்து வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது பேசிய அவர், ஜனநாயகத்தை ஒழுங்கமைக்க வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் 10 ஆண்டுகள்தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவேண்டும். தற்போது 4 கோடி சிக்கியது தொடர்பாக அண்ணாமலைதான் பதிலளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் சீமான் வித்யா வீரப்பனை ஆதரித்து மேடையில் பாட்டு பாடி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது திடீரென மேடையில் ஏறிய இளைஞர் சீமானுடன் புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் கோபமடைந்த சீமான் முட்டா பய, அவன் பிரச்சனை அவனுக்கு, போட்டோ எடுக்க பார்க்குறான் என்று கடுமையாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
மேடையில் ஏறி தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற நபரை முட்டாப்**ங்க என்று திட்டிய சீமான் 🤣 pic.twitter.com/DiK5ZCHbi2
— கபிலன் (@_kabilans) April 7, 2024