திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
பாம்பு விஷத்தில் நொடியில் உறையும் ரத்தம்.. அதிர்ச்சியை தரும் காட்சிகள்.! பாம்பு கடித்தால் இப்படித்தான் மாற்றம் நிகழுமா?

உலகளவில் பல நச்சுத்தன்மை கொண்ட நாகங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு நாகத்துக்கும் என தனி அளவிலான திறன், விஷத்தின் வீரியம் போன்றவை இருக்கிறது. பொதுவாக நாகம் தன்னை தாக்க வரும் நபருக்கு அல்லது தனது அச்சுறுத்தலுக்கு கேடு விளைவிக்கும் நபரை தீண்டுகிறது.
வயல்வெளி, வனப்பகுதிகளில் இயற்கையாக இருக்கும் நாகங்களின் விஷம் மற்றும் வீரியத்தை பொறுத்து மரணமும் நிகழுகிறது. பாம்பின் ஒரு துளி அளவிலான விஷம் கூட மனிதரின் உயிருக்கு எமனாகக்கூடியது.
ரத்தம் உறையும்
இன்றளவில் மருத்துவமனைகளில் பாம்பின் வகையை உறுதி செய்துவிட்டால், அதற்கேற்ப சிகிச்சை அளித்து உயிரை காக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், பாம்பினால் கடிபடும் நபரின் ரத்தம் எவ்வுளவு விரைந்து உயிரையும் என உங்களுக்கு தெரியுமா?.
இதையும் படிங்க: Watch: நடுராத்திரி எண்ணங்கடி உங்களுக்கு ரீல்ஸ்சு.. பெண்களை துரத்தியடித்த தெரு நாய்கள்.. வைரலாகும் வீடியோ.!
20 நிமிடம் தான்
ஆய்வாளர்களின் கூற்றுப்படி அதிகபட்சம் 20 நிமிடத்திற்குள் மனித உடலில் உள்ள ரத்தம் உறையும். பாம்பின் தன்மை, அது செலுத்திய விஷத்தின் வீரியம், பாம்பு கடியை எதிர்கொண்ட நபரின் பதட்ட நிலை உட்பட பல்வேறு காரணங்களை வைத்து அதன் செயல்பாடுகள் என்பது மாறுபடும்.
இந்நிலையில், பாம்பு கடித்த பின்பு ரத்தம் எப்படி உறைகிறது என்பதன் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு சொட்டு அளவிலான பாம்பின் விஷம் செலுத்திய பின்னர் ரத்தம் உறையும் வீடியோவில் உள்ளதுபடி, நமது உடலில் பாம்பு தீண்டிய பின்னரும் மாற்றம் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓடும் இரயிலில் நிலைதடுமாறி சோகம்.. நொடியில் உயிர்தப்பிய பெண்மணி.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!