ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
பிரசவத்தை மறைத்து இளம்பெண் செய்த காரியத்தால் திகைத்த டாக்டர்கள்: திடுக்கிடும் சம்பவம்..!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகேயுள்ள உடுமண்ணூர் முக்குளி கிராமத்தை சேர்ந்தவர் சதீசன். இவரது மனைவி சுஜிதா ( 26). இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுஜிதா 3 வது முறையாக கர்ப்பமானார். இதனை கணவருக்கும் மற்றவர்களுக்கும் தெரியாமல் மறைத்து வந்தார்.
இந்த நிலையில் சுஜிதா ரத்த அழுத்தம் அதிகமானதால் திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து சதீசன் அவரை சிகிச்சைக்காக தொடுபுழா அரசு மருத்துவமனையில் அனுமத்துள்ளார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பிரசவமானது தெரியவந்தது.
இதன் பின்னர் மருத்துவர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு குழந்தை பிறந்ததாகவும், குடும்ப வறுமையின் காரணமாக அதனை பாத்ரூமில் இருந்த தண்ணீர் வாளியில் மூழ்கடித்து கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் தொடுபுழா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தண்ணீர் வாளியில் இருந்த ஆண் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுஜிதாவை கைது செய்தனர்.