மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜார்கண்டில் தமிழக மருத்துவக்கல்லூரி மர்ம மரணம்; அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு.!
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் மதன் குமார் (வயது 27). இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி நகரில் செயல்படும் ரிம்ஸ் (Rajendra Institute of Medical Sciences -RIMS) அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தங்கியிருந்தவாறு, இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார்.
மருத்துவக்கல்லூரியில் இருக்கும் 5ம் விடுதியில், எண். 63 அறையில் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று மாலை 05:40 மணியளவில், மாடியில் இருந்து கீழே எதோ விழுந்ததுபோல சத்தம் கேட்டுள்ளது.
இதனையடுத்து, விடுதியின் மாடியில் தங்கியிருந்த மாணவர் ஒருவர் பின்னால் சென்று பார்த்தபோது, மதன்குமார் உடல் பாதி எரிந்த நிலையில் இருந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நபர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அவரின் மர்ம மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். மதன் குமாரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் ராஞ்சி விரைந்துள்ளனர்.