திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மாமா: சொந்த வீட்டிலேயே நடந்த கொடுமை.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பலியா கிராமத்தில், 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரின் குடும்பத்துடன் சிறுமியின் மாமாவும் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று சிறுமி தனது மாமாவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்.
பயந்துபோன சிறுமி எதுவும் கூறாமல் இருக்க, அவரின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த பெற்றோர் விசாரித்தபோது உண்மை அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து, சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியின் மாமாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.