மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென மூர்க்கமாகி முட்டித் தூக்கிய காளை; 75 வயது முதியவர் சுருண்டு விழுந்து பலி..! நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
வீட்டில் இருந்து வெளியே புறப்படும்போது, நமது முழு பாதுகாப்பை நாமே உறுதிசெய்ய வேண்டிய சூழ்நிலை ஒவ்வொரு இடத்திலும் ஏற்பட்டுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி மாவட்டம், பரதாரி சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணானந்த் பாண்டே (வயது 75). இவர் சம்பவத்தன்று தனது வீட்டருகே காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்தார்.
அச்சமயம் அங்கு கன்றுடன் வந்த காளை மாடு ஒன்று, எதிர்பாராத விதமாக திடீரென மூர்க்கமாகி பாண்டேவை தாக்கியது. இந்த சம்பவத்தில் காளையின் கொம்புகள் (Bull Attack Death) தீண்டி அவர் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
முதியவர் கொம்பால் தீண்டப்பட்டு கீழே சுருண்டு விழுந்த பதிலும், அவரை காளை கடுமையாக தாக்கியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது.
இதுகுறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உள்ளூர் மக்கள் நகராட்சி அதிகாரிகள் மற்றும் காளைகளை வளர்ப்போரின் மீது குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.
रामराज्य: उत्तरप्रदेश,
— Article19 India (@Article19_India) January 25, 2024
आर्यावर्त, जिला बरेली।
सांड महदेव ने कृष्णानंद पांडेय के ह्रदय पर तेज प्रहार किया जिससे उनकी मौत हो गई। धरती पर धराशाई होने के बाद भी मारते रहे महाराज। उत्तर प्रदेश में ऐसी घटनाएं अब गंभीर समस्या बन गई है।#UttarPradesh #RamRajya pic.twitter.com/UWlW0Sck5X