மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வருடக்கணக்கில் இ.பி பில் செலுத்தாத பிரபல கட்சி.. பவரை கட் செய்த அதிகாரிகள்.. சம்பவம் செய்த மின்வாரியம்.!
மின்கட்டணத்தை செலுத்தாததால் பிரபல கட்சியின் அலுவலகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி நகரில் சமாஜ்வாடி கட்சியின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மின் கட்டணத்தொகை கடந்த 5 - 7 வருடமாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் மின்வாரிய அதிகாரிகள் கணக்குகளை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு, ரூ.1 இலட்சத்திற்கு மேல் மின் கட்டணம் செலுத்தாதோரின் தரவுகளை எடுத்து, அவர்களை உடனடியாக மின்கட்டணம் செலுத்த ஆணையிட்டனர்.
அதனை ஏற்றுக்கொண்டு பலரும் மின்கட்டணத்தை அபாரதத்துடன் செலுத்திய நிலையில், சமாஜ்வாடி கட்சி அலுவலகத்தில் இருந்து மின்கட்டணம் செலுத்தப்படவில்லை. இதனால் அதிகாரிகள் அந்த கட்டிடத்திற்கான மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.