மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உயிரிழந்த பேரனுடன் 5 நாட்கள் வாழ்ந்த மூதாட்டி; மனநலம் பாதிக்கப்பட்டதால் சோகம்.!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மவுகரியா பகுதியைச் சேர்ந்த மூதாட்டியுடன் அவரது பேரன் பிரியன்சு வசித்து வந்துள்ளார். சிறுவனுடைய பெற்றோர் சிறுவயதிலேயே உயிரிழந்து விட்ட நிலையில், சிறுவன் மூதாட்டியின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.
மூதாட்டிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவன் உயிரிழந்து ஐந்து நாட்களாகிவிட்ட நிலையில், அதனை அறியாத மூதாட்டி சிறுவனுக்கு அவ்வப்போது ஆடை உடுத்தி, அவனை குளிக்கவைத்து பராமரித்து வந்துள்ளார்.
2 நாட்களுக்கு முன் துர்நாற்றம் வந்ததால் அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆய்வு செய்தபோது சிறுவனின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டு அழுகிய நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மூதாட்டியிடம் விசாரணை நடந்து வருகிறது.