மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுற்றுலாப்பயணம் இறுதி பயணமான சோகம்; 800 அடி பள்ளத்தில் விழுந்த கார்.. 6 பேர் பலி.!
உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறுவது உண்டு. மலைப்பாங்கான பகுதியில் எதிர்பாராத விதமாக நடக்கும் விபத்துகள் பலரின் உயிரை பறிக்கும் சோகம் நடந்து வருகிறது.
கடந்த வாரம் கூட கர்ப்பிணி மனைவிக்கு ஸ்கேன் எடுக்க குடும்பத்தினருடன் பயணம் செய்த நபர் உட்பட 8 பேர் பலியான சோகம் நடந்து இருந்தது.
இந்நிலையில், டேராடூனில் உள்ள டூங் பகுதியில், 800 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. சிம்லா பகுதியை சேர்ந்த 6 பேர் விபத்தில் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
விபத்து குறித்த தகவல் அறிந்த மீட்பு படையினர், விபத்தில் உயிரிழந்தோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். பலியானோரின் அடையாளம் காணப்பட்டு வருகிறது.