மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஸ்னாப்சாட்டில் பழக்கத்தை நம்பி, ட்ரூத்-டேர் கேமில் நிர்வாண படங்கள் அனுப்பிய சிறுமி; அதிரவைக்கும் சம்பவம்.!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ராடூன் பகுதியை சேர்ந்த சிறுமி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தன்னை 27 வயதுடைய நபர் ஒருவர், ஆபாச புகைப்படங்களை காண்பித்து மிரட்டி வருவதாக கூறி இருக்கிறார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், சம்பந்தப்பட்ட இளைஞர் பெண்ணிடம் ஷார்சாட் செயலி வாயிலாக நட்பை ஏற்படுத்தி பழகி வந்துள்ளார். பின் Truth and Dare எனப்படும் விளையாட்டின் வாயிலாக, பெண்ணை அரைநிர்வாணமாக கேமிரா முன் தோன்றவைத்துள்ளார்.
இதனை சிறுமிக்கே தெரியாமல் வீடியோ எடுத்து வைத்து, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் செயல்பாடுகள் பெற்றோருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
அவரின் செல்போனை பெற்றோர் பார்த்தபோது சிறுமியின் நிர்வாண படங்கள் இருந்துள்ளது. பின் விசாரணையின் உண்மை அம்பலமாகவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி சுபன் அலி என்பவரை கைது செய்தனர். அவரின் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அலியின் மீது போக்ஸோ சட்டமும் பாய்ச்சப்பட்டுள்ளது.
மேலும், அலி தன்னை முதலில் பெண் போல பேசி பழகி, ஆபாச படத்தை பெற்றதும் தனது சுயரூபத்தை காண்பித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.