மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தை திருமணம் செய்து சிறுமி பலாத்காரம்; சொந்த மனைவியிடமும் அத்துமீறிய பயங்கரம்..!
உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ராடூன், பிதோராகர்க் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியை அவரின் தந்தை 38 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
38 வயது நபர் சிறுமியை திருமணம் செய்து பாலியல் ரீதியாக துன்புறுத்திய நிலையில், அதுதொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட 5 மாதங்கள் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்தவர், தனது முதல் மனைவியின் வீட்டிற்கு சென்று, அவருக்கு விருப்பம் இன்றி பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்ததாக தெரியவருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 38 வயது நபரை கைது செய்தனர். குழந்தை திருமணம் செய்துவைத்த குற்றத்திற்காக ஏற்கனவே சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.