பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கள்ளக்காதல் விவகாரம்... வாட்ஸ் ஆப்பில் மெஸேஜ்.. மனைவி தற்கொலை... காவல்துறை விசாரணை.!
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கணவரின் கள்ளக்காதலால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் ஹேங்கனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சேத்தன் கௌடா. இவர் பவித்ரா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சேத்தன் கௌடாவுக்கும் வேறொரு பெண்ணிற்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த விஷயத்தால் மிகவும் மனமுடைந்து இருக்கிறார் பவித்ரா.
தனது கள்ளக்காதல் விவகாரத்தை பற்றி கேத்தன் கௌடாவே தனது மனைவியிடம் நேரடியாக கூறியதால் விரக்தியடைந்த அவர் வாட்ஸ் அப் மூலம் கடிதத்தை கணவருக்கு அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.