ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
கள்ளகாதலனுக்காக கணவனை கொன்ற மனைவி!. அதிர்ச்சி சம்பவம்!.

தெலுங்கானாவின் ஹாலியா பகுதியைச் சேர்ந்த தாரா ஸ்ரீனியா என்ற நபருக்கும் வானி என்ற பெண்ணுக்கும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, இருவரும் அப்பகுதியில் வசித்துவந்தனர்.
இவர்கள் வீட்டின் அருகே வெங்கட ரெட்டி என்பவர், ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஸ்ரீனியா லாரி ஓட்டுநர் என்பதால் அடிக்கடி வெளியில் சென்றுவிடுவார். இதனால் வெங்கட ரெட்டிக்கும், வானிக்கும் பழகியுள்ளனர். முதலில் நண்பர்களாக இருந்த இவர்கள் நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்த விஷயம் ஸ்ரீனியாவுக்கு தெரிந்ததால் அவர் மனைவி வானியை கண்டித்துள்ளார். ஆனாலும் வெங்கட ரெட்டியுடன் உள்ள உறவை விடமுடியாத காரணத்தினால் கணவனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதற்கு வெங்கட ரெட்டியின் உதவியுடன் ஸ்ரீனியாவை கழுத்தை நெரித்தும், அடித்தும் கொலை செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் வெங்கட ரெட்டி மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வந்துள்ளது.
வானி மற்றும் வெங்கட ரெட்டி இருவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்ததை ஒத்துக் கொண்டதால், இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.