#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ட்விட்டரில் அதிரடியாக பின்வாங்கிய சின்மயி..! காரணம் என்ன..?
பின்னணிப் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக பதிவிட்டார். இந்த பிரச்னை நாடு முழுவது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
மேலும் பாலியல் தொல்லைகளில் சிக்கிய பலர் பாடகி சின்மயிடம் தங்களது குறைகளை கூறி வருகின்றனர். இதனை சின்மயி அவரது #MeToo என்ற ஹாஸ்டேக் மூலம் டுவிட்டர் பக்கத்தில் பகிரங்கமாக வெளியிட்டு வந்தார். இதன் மூலம் பல பிரபலங்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சின்மயியின் இத்தகைய துணிச்சலான நடவடிக்கைக்கு பல தரப்பினர் ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். அதே சமயத்தில் அவருக்கு எதிராகவும் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் சின்மயியை மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்தும் வருகின்றனர்.
இவ்வாறு அதிரடியாக செயல்பட்டு வந்த சின்மயி தற்போது தனக்கு ஓய்வு தேவைப்படுகிறது என கூறி ட்விட்டரில் இருந்து விடைபெற்றுள்ளார். மேலும் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி எனவும் அவர் கூறியுள்ளார்.
To those who tweeted ou in support 🙏🙏🙏 pic.twitter.com/Jdd5Eyi3VE
— Chinmayi Sripaada (@Chinmayi) October 11, 2018
சின்மயியின் இந்த அதிரடி முடிவை கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சின்மயி திடீரென இவ்வாறு முடிவெடுக்க காரணம் என்ன என்றும் பலருக்கு கேள்வி எழுகின்றது. பல பிரபலங்களின் முகத்திரையை கிழித்ததால் இவருக்கு நெருக்கடிகள் எதுவும் ஏற்பட்டிருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகின்றது.
இவர் ஏதேனும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி இருக்கலாம் என்றும் பலர் எண்ணுகின்றனர். இவர் ஏன் இத்தகைய முடிவு எடுத்துள்ளார் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.