மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலனுடன் கடற்கரைக்குச் சென்ற பெண்ணை சின்னாபின்னமாக்கிய 7 பேர் கொண்ட கும்பல்! 6 பேர் கைது
கர்நாடக மாநிலம் மங்களூர் தோட்டா பேங்க்ரே கடற்கரைக்குச் சென்ற பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளனர். அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் இதுவரை ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் இரண்டு பேர் மைனர் என்பது தெரியவந்துள்ளது.
மங்களூர் கடற்கரை அருகே உள்ள அலுவலகத்தில் பணியாற்றி வரும் பாதிக்கப்பட்ட அந்த பெண் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி தன்னுடைய காதலருடன் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது கடற்கரையில் இருந்த மீனவர்களின் ஒருவர் இந்த ஜோடியிடம் வந்து சாதாரணமாக பேசுவது போல் பேச்சுக் கொடுத்துள்ளார். இந்த உரையாடல் சற்று காரசாரமாக முற்றவே அந்த மீனவர் அந்தப் பெண்ணுடன் வந்த நபரை அடித்து விரட்டி உள்ளார். பின்னர் அவருடன் இருந்த மற்ற ஆறு மீனவர்களும் சேர்ந்து அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரங்களுக்கு மேலாகியும் இது தொடர்பாக அந்த பெண் போலீசாரிடம் புகார் அளிக்கவில்லை. மாறாக கடந்த திங்கட்கிழமை அன்று மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். முதலில் அந்தப் பெண் இது தொடர்பாக புகார் அளிக்க எனக்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்ததை கேள்விப்பட்ட காவல்துறையினர் அந்த பெண்ணை அணுகி புகார் அளிக்கும்படி வற்புறுத்தியுள்ளனர். அதன் பின்னரே இந்தப் பெண் நடந்த சம்பவங்களை பற்றி கூறி புகார் அளித்துள்ளார்.
அந்த பெண்ணின் புகாரை ஏற்ற காவல்துறையினர் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று பெண்ணை கற்பழித்த ஆறு மீனவர்களை உடனடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவர்களை மங்களூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.